Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓட்டு போட வந்த அஜித் - கூட்டத்தில் மர்ம நபரால் தாக்கப்பட்டாரா? பரவும் வீடியோ

நடிகர் அஜித் நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க காலையிலேயே வந்திருந்தார். அவரை பொது இடத்தில் பார்ப்பது அரிது என்பதால் வாக்களிக்க வரும்போதாவது நேரில் பார்த்துவிடலாம் என்ற ஆசையில் அதிக அளவில் ரசிகர்கள் குடியிருந்தனர்.

அந்த கூட்டத்தை போலீசாரால் எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் அங்கிருந்த பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசல் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில் அஜித் நடந்துசெல்லும் போது மர்ம நபர் ஒருவர் அவரது தலையின் பின்புறம் அடித்துள்ளது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.