Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது பைத்தியக்காரத்தனம்! ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லுங்க லாரன்ஸ் மாஸ்டர்..

நடிகர் ராகவா லாரன்ஸ் சமீப காலத்தில் பேய் படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார். அவர் நடித்துவரும் காஞ்சனா சீரிஸ் பெரிய ஹிட் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த வாரம் வெளிவந்த காஞ்சனா 3 தற்போது விமர்சனங்களை தாண்டி பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லாரன்ஸின் ரசிகர் ஒருவர் முதுகில் கொக்கி போட்டு அந்தரத்தில் தொங்கியபடி லாரன்ஸின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்கிறார்.

இந்த வீடியோவை பார்த்துவிட்டு பிரபல இயக்குன நவீன் ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார். "இது பைத்தியக்காரத்தனம். லாரன்ஸ் மாஸ்டர் உங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லுங்க. இப்ப சமீபத்துலதான் ஒரு சாமியார் விழுந்து செத்தான். தொங்குற இந்த முட்டாள நம்பி கண்டிப்பா ஒரு குடும்பம் இருக்கும்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.