சர்ச்சையை ஏற்படுத்திய காமசூத்ரா 3டி படத்தில் நடித்திருந்த நடிகை சாயிரா கான் தற்போது திடீரென மரணமடைந்துள்ளார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Sherlyn Chopraவுக்கு பதில் இந்த படத்தில் நடித்தவர் தான் சாயிரா. அவர் பற்றி பேட்டி அளித்துள்ள அந்த படத்தின் இயக்குனர் Rupesh Paul, "மாரடைப்பு காரணமாக சாயிரா இறந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அந்த படத்தில் சாயிராவை நடிக்க ஒப்புக்கொள்ளவைக்க அதிகம் கஷ்டப்பட்டேன். அவர் ஒரு conservative முஸ்லீம் குடும்பத்தில் இருந்து வந்தவர். அதனால் இப்படி ஒரு படத்தில் எப்படி நடிப்பது என யோசித்தார்.
பல மாதங்கள் அவரை சமாதானப்படுத்தி தான் அவரை நடிக்கவைத்தேன். பல மாதம் காத்திருந்ததற்கு அவர் நடித்த விதம் எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது" என அவர் கூறியுள்ளார்.