Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நமது நாட்டின் மிக சிறந்த நடிகர் சூர்யா தான்! யார் சொன்னா தெரியுமா

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் அடுத்த மாதம் NGK படம் வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு வேலைகளில் இருந்து மிக அற்புதமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்திற்கு அடுத்ததாக கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் சூர்யா தனது 37வது படமான காப்பான் படத்திலும் நடித்து முடித்து விட்டார்.

இதனால் தனது 38வது படமான இறுதி சுற்று இயக்குனர் சுதா கோங்க்ராவின் இயக்கத்தில் உருவாகிவரும் சூறரை போற்று படத்தில் பிசியாக நடித்து வருகிறார், சூர்யா. இந்நிலையில் சூர்யா, நமது நாட்டின் மிக சிறந்த நடிகர் என சுதா கோங்க்ரா தனது சமீபத்திய பேட்டியில் கூறி அனைத்து சூர்யா ரசிகர்களையும் பரவசப்படுத்தியுள்ளார்.