Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-விஜய்யை இணைக்க இவர் ஒருவரால் தான் முடியும் - பிரபல தயாரிப்பாளர்

நடிகர் சினிமாவில் டாப் ஹீரோக்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரை இணைத்து ஒரு படத்தில் நடிக்கவைப்பேன் என வெங்கட் பிரபு பல காலமாக கூறி வருகிறார். ஆனால் அதற்கான வாய்ப்பு இதுவரை அமையவில்லை.

இந்த இரண்டு நட்சத்திரங்களும் இணைவது சாத்தியமா என்று கூட ரசிகர்கள் மனதில் கேள்வி உள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அளித்துள்ள பேட்டியில், "தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் RRR என்ற படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அதுபோல தமிழில் ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர் மல்டிஸ்டாரர் கதை கொண்டுபோனால் தான் விஜய்-அஜித் இணைந்து நடிப்பது சாத்தியம்" என கூறியுள்ளார்.