Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறாரா? இல்லையா? வில்லன் ஜாக்கி ஷெரப் கூறிய பதில்

நடிகர் விஜய் தற்சமயம் அட்லீயின் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி-63 படத்தை வருகிற தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளது, படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம்.

கால்பந்து விளையாட்டை மையக்கருத்தாக கொண்ட உருவாகி வரும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பிரமாண்ட கால்பந்து ஸ்டேடியம் செட்கள் போடப்பட்டு சென்னை சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் படத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஆரம்பத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி குறித்து படத்தின் வில்லன் ஜாக்கி ஷெரப் கூறுகையில், எனக்கு இப்படத்தில் ஷாருக்கானும் நடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து நடிகர்களும் மற்ற மொழி படங்களில் நடிக்க முயற்சிக்க வேண்டும். எனக்கு தமிழ் சினிமா உலகம் மிகவும் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார்.