Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பக்கா யங் கெட்டப்பில் ரஜினி! தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான லேட்டஸ்ட் புகைப்படம்

பேட்ட படத்திற்கு பிறகு தர்பார் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தை முதன்முதலாக ரஜினியுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும் யோகிபாபு காமெடியனாகவும் நடித்து வருகின்றனர்.

தற்சமயம் மும்பையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ரஜினியின் புகைப்படங்கள் சில நாட்களாகவே கசிந்த வண்ணம் உள்ளன. அதிலும் லேட்டஸ்ட்டாக வெளிவந்துள்ள போட்டோவில் பக்கா யங் கெட்டப்பில் ரஜினி உள்ளார். மேலும் இந்த போட்டோவில் இருந்து பார்க்கும் பொழுது யோகிபாபு ரஜினிக்கு உதவியாளராக இப்படத்தில் நடிப்பது போல் உள்ளது.