Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேய்க்கு குட் பை சொன்ன ராகவா லாரன்ஸ்! அடுத்த படத்தின் கதை இதுதானாம்

காஞ்சனா படத்தை ஒரே மாதிரியான பேய் கதையில் மூன்று பாகங்களாக இயக்கி நடித்து விட்டார் ராகவா லாரன்ஸ். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றன, என்றபோதும் ஒரேமாதிரி கதை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், காஞ்சனா-3 படம் வெளியானதும், காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கை அக்சய் குமாரை வைத்து இயக்கி வருகிறார் லாரன்ஸ். காஞ்சனா 3 படத்தை பார்த்த பெருவாரியான ரசிகர்கள், முந்தைய படங்களைப் போலவே உள்ளது என்று தங்களது சலிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் காஞ்சனா 4 படத்தையும் பேய் கதையில் இயக்க திட்டமிட்டிருந்த ராகவா லாரன்ஸ், தனது ரூட்டை மாற்றுகிறார்.

அதாவது அடுத்து இயக்கும் படத்தை பேய் கதை அல்லாமல், பாம்பை மையமாகக் கொண்ட கதையில் இயக்குகிறார். இந்த படமும் பாம்பிற்குள் ஆவி புகுந்து பழிவாங்கும் படமாக கூட இருக்கலாம். இந்த படத்திற்கு கால பைரவா என்று டைட்டில் வைத்திருக்கிறாராம் லாரன்ஸ்.