இந்த படத்தில் நான் நடித்ததற்கு விஜய் தான் காரணம்! டெல்லி கணேஷுன் உணர்ச்சிவசமான பேட்டி
கோலிவுட்டின் தளபதியாக இருக்கும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்று அத்தனை குணச்சித்திர நடிகர்களுக்கும் ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்களை விஜய்யே தனது படத்தில் நடிக்க அழைத்தால் அவர்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க போகிறது.
அப்படிதான், விஜய் நடிப்பில் கடந்த 2002ல் வெளியான தமிழன் படத்தில் அவருக்கும் டெல்லி கணேஷிற்கும் இடையேயான காமெடி காட்சிகள் அல்டிமேட்டாக இருக்கும். ஆனால் இப்படத்தில் முதலில் வேறொருவர் தான் நடித்தாராம். ஒரு நாள் முழுவதும் அவர் நடித்தும் படக்குழுவினர் திருப்தியாகவில்லை.
பிறகு விஜய் தான் டெல்லி கணேஷின் பெயரை பரிந்துரைத்துள்ளார். இதனை சமீபத்திய நேர்காணலில் டெல்லி கணேஷே கூறியுள்ள நிலையில் இந்த நிகழ்வை எந்தவொரு பேட்டியிலும் கூற அவர் மறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.