Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பறிபோன தலைவர் பதவி! நடிகர் விஷால் எடுத்த அதிரடி முடிவு - தீர்வு என்ன

நடிகர் விஷால் தற்போது தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கிறார். அதே வேளையில் அவர் நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

அவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் கழிந்துவிட்டது. இதனால் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதே வேளையில் தயாரிப்பாளர் சங்கம் விவகாரத்தில் விஷால் கொடுத்த வாக்குறுதிகளின் படி நிர்வாகம் செயல்படவில்லை என சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் பதில் சரிவர இல்லாத காரணத்தால் தயாரிப்பாளர் சங்க பொறுப்பை தமிழக அரசு நிர்வகிக்கும் என தனி அதிகாரியை அமைத்து அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் முறைகேடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில் தனி அதிகாரியை நியமித்தது தவறு என மனுவில் கூறியுள்ளார்.

இதன் விசாரணை நாளை நடைபெறவுள்ளது.