Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எலும்பும் தோலுமாக மாறிய பாகுபலி நடிகர்! எப்படியாகிவிட்டார் பாருங்க

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி படத்தில் வில்லான நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் நல்ல உடற்கட்டுடன் இருந்த ராணாவை தற்போது பார்ப்பவர்களால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.

காரணம் மனிதர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளார். அவர் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. வேணு உடுகுலா இயக்கி வரும் விரத பர்வதம் 1992 படத்திற்காக தான் இப்படி ஒல்லிக்குச்சியாகியுள்ளார். இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்று படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருந்தவர் விரத பர்வதம் படத்திற்காக ஒரேயடியாக ஒல்லியாகிவிட்டார்.