நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நிலையில் பல முறைகேடுகள் நடந்ததாக கூறி சர்ச்சை எழுந்தது.
அதனால் அரசு தனி அதிகாரி நியமித்து இனி தயாரிப்பாளர் சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளை கவனிக்கும் என அறிவித்தது. இதை எதிர்த்து விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது.
அதில் அரசின் நடவடிக்கைமீது தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் கூறிவிட்டனர், இதனால் விஷால் தரப்பிற்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.