Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் தர்பார் பட வில்லன் இவர் தானாம்! போட்டோவும் வெளியானது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நயன்தாரா கதாநாயகியாக நடித்துவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மும்பையில் தற்சமயம் படுவேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து தினமும் ஒரு போட்டோவாக கசிந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் வில்லன் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

சூர்யாவின் அஞ்சான், சேட்டை உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த ப்ரதீப் கப்ரா தான் ரஜினியின் தர்பார் படத்திலும் வில்லனாம். தற்சமயம் படப்பிடிப்பில் நடித்துவரும் இவர் இப்படத்தை பற்றி கூறுகையில், இந்த கதாபாத்திரத்திற்காக நேர்காணலில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளேன். இயக்குனரின் குழுவிற்கு எனது நடிப்பு திறமை பிடித்திருக்கும் என நம்புகிறேன் என்றார். மேலும் இவர் இந்தியின் தபாங்-2 படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.