Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு யாருமே இல்லை! விஜய் பற்றி தல அஜித் கூறி வருத்தப்பட்ட தருணம்

நடிகர் அஜித் சினிமா துறையில் பின்னணி இல்லாமல் தனியாக போராடி முன்னணிக்கு வந்தவர். அந்த ஒரு காரணத்திற்காகவே அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

ஆரம்பகாலத்தில் தன்னிடம் அஜித் பேசியதை வான்மதி பட நடிகை ஸ்வாதி தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

"விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே இல்லை. அதற்காகவே நான் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி பெற்றால் தான் அடுத்தபடம் கிடைக்கும். கண்டிப்பாக ஒரு நாள் பெரிய ஹீரோவாக ஆவேன்" என கூறினாராம் அஜித்.

மேலும் பேசிய ஸ்வாதி, "விஜய் அவருடைய அப்பாவின் கனவை தான் நிறைவேற்றினார். ஆனால் அஜித் தன் சொந்த கனவை நிறைவேற்றியுள்ளார். கடின உழைப்பால் தான் அது முடிந்தது. அஜித் யாருக்கும் தெரியாமல் உதவி செய்வார். ஆனால் விஜய் உதவி செய்துவிட்டு அதை பப்லிசிட்டி செய்வார்" என குறிப்பிட்டுள்ளார்.