Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் அசுரன் படத்தில் மியா கலிபாவா? மர்ம நபர்களின் செயலால் அதிர்ச்சியான படக்குழு

வடசென்னை படத்திற்கு பிறகு வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். திருநெல்வேலியை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது.

மேலும் இப்படத்தின் மூலம் கேரள நடிகை மஞ்சு வாரியர் முதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் நடிகர்களை பற்றி கூகுளில் பதிவிட்டால் தனுஷிற்கு முன்னதாகவே பிரபல ஆபாச பட நடிகை மியா கலிபாவின் பெயரும் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸின் பெயரும் வருவது அசுரன் படக்குழுவையும் தனுஷின் ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.