Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் ரசிகர்கள் அதிகம் உள்ள மண்ணில் இந்த பிரபல நடிகருக்கும் இப்படி ஒரு கொண்டாட்டமா! போஸ்டர் ஆச்சர்யம்

விஜய், அஜித் இருவருக்குமே உலகின் பல படங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சினிமாவில் இருவருமே உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள். பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல கலெக்‌ஷன் கொடுத்து வருகிறார்கள்.

மற்ற மொழி சினிமாக்களிலும் உள்ள ஹீரோ, ஹீரோயின்கள் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் ஆதரித்து கைதூக்கி விடுவார்கள் என்பது பலரும் அறிந்ததே.

அரசியல் வட்டாரம், சினிமாத்துறை என இரண்டும் சற்று அதிகம் கவனம் செலுத்துவது மதுரைக்கு தான். அங்கு இரண்டிற்கும் ரசிகர்கள் மிக அதிகம். இங்கு அஜித், விஜய் படங்கள் ரிலீஸ் என்றால் இங்கு பரபரப்பு தான்.

ஆனால் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு போஸ்டர் அடித்து பல இடங்களில் ஒட்டி ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். நாளை அவரின் மகரிஷி படம் வெளிவருகிறது அல்லவா அதற்குதான் இந்த ஏற்பாடு.