Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பில்லா பாண்டி படத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் நுழையும் ஆர்.கே.சுரேஷ்

தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஆர்.கே.சுரேஷ், பில்லா பாண்டி மூலம் ஹீரோவாக மாறினார். அதேசமயம் மலையாளத்தில் அவருக்கு வில்லன் வாய்ப்புகளும் தேடி வந்தன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான மம்முட்டி நடித்த மதுர ராஜா படத்தில் கெட்ட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ஆர்.கே.சுரேஷ்.

இந்தநிலையில் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாக இருக்கும் கொச்சின் ஷாதி சென்னை என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

கேரளாவை சேர்ந்த ஒரு ஏழைப்பெண்ணின் மீதான பாலியல் வன்முறையின் குற்றத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையை கூறும் இப்படம் 70% தமிழும் 30% மலையாளமும் கலந்து உருவாக இருக்கிறதாம்.