Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரும்புதிரை-2வில் விஷாலின் ஜோடியான அஜித் பட நடிகை! சமந்தா என்ன ஆனார்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.

முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்தை மித்ரன் இயக்கவில்லை. மாறாக இயக்குநர் எழிலின் முன்னாள் உதவியாளரான புதுமுகம் ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம்.

சமந்தா இல்லையா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்ப, இரும்புத்திரை 2 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

இரும்புத்திரை மட்டுமல்லாமல் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.