Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹிந்துக்கள் தீவிரவாதிகளா? கமல்ஹாசனுக்கு விவேகம் நடிகர் விவேக் ஓபராய் பதிலடி

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் முஸ்லிம்கள் நிறைந்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஒரு இந்து. அவர் பெயர் நாத்துராம் கோட்சே" என கூறினார்.

இந்துக்கள் பற்றி கமல் பேசியுள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் கமலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவேகம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்த விவேக் ஓபராய் கமல் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ட்விட் செய்துள்ளார்.

"கமல் சார் நீங்கள் சிறந்த நடிகர். கலைக்கு எப்படி மதம் இல்லையோ அதுபோல தீவிரவாதத்திற்க்கு மதம் இல்லை. கோட்ஸே தீவிரவாதி என கூறியதோடு நிறுத்தாமல் ஏன் ஹிந்து என குறிப்பிட்டீர்கள்" என அவர் கோபமாக பதிவிட்டுள்ளார்.