Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு அப்புறம் தான் சூர்யாவாம்! இயக்குனரின் அதிரடி திட்டம்

விஜய் தற்சமயம் அட்லீயின் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி-63 படத்திற்கு அடுத்ததாக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இயக்குனர்களில் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் முன்னிலையில் இருப்பதாகவும் இவரது இயக்கத்தில் தான் விஜய் அடுத்ததாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படம் 1970 காலக்கட்டங்களில் புகழ்பெற்ற இரும்புக்கை மாயவி என்ற காமிக்ஸ் புத்தகத்தின் கதையாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின் தளபதி-64 படம் டார்க் கேங்ஸ்டர் என வேறொரு கதையில் உருவாகவுள்ளதாம். இரும்புக்கை மாயவி கதையில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளாராம். தளபதி-64 படம் முடிந்த கையோடு சூர்யா வைத்து இயக்கவுள்ளாராம், லோகேஷ் கனகராஜ்.