Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாதாரண கூலி தொழிலாளி மகளுக்காக அசத்தலான காரியம் செய்த விஜய் சேதுபதி ரசிகர்கள்!

விஜய் சேதுபதி இன்று மக்களிடம் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றுவிட்டார். அவரின் படங்கள் அதிகமாக வெளியாகின்றன. தற்போது டிவியிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்ட அவர் சமூகத்தில் நடக்கும் பல விசயங்கள் குறித்து பேசி வருகிறார். அவரின் முற்போக்கு சிந்தனை கருத்துக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் அவரின் ரசிகர்கள் அண்மையில் உலகளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 2 தங்கப்பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 14 வயது சிறுமி இலக்கியாவுக்கு தங்க நாணயத்தை பரிசாக கொடுத்துள்ளனர்.

அந்த சிறுமியின் தந்தை சென்னை கோயம்பேடு பகுதியில் லோடு மேன் ஆக பணியாற்றுகிறாராம்.