Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்ததால் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த ஏப்ரல்-18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ஸ்ரீகாந்த், காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்ததாக தனது விரலை காட்டியப்படி போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

அதிகாரி இவ்வாறு தெரிவித்திருந்தாலும், தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜேஷ்வரி ப்ரியா இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், பொது மக்கள் பலர் வாக்காளர் அட்டை இருந்து வாக்களிக்க அனுமதிக்காத தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த், அவரது மனைவியை அனுமதித்தது ஜனநாயகத்திற்கு எதிரானது.

ஸ்ரீகாந்த் வாக்களித்த அந்த வாக்குச் சாவடிக்கு மறுதேர்தல் நடத்த ஆணையத்திடம் புகார் அளித்தும், அது நிராகரிக்கப்பட்டுள்ளதால், காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேர்தல் வழக்குதான் தொடர முடியுமெனவும், மறு வாக்குப்பதிவு நடத்த முடியாது எனவும் கூறி வழக்கை வரும் மே-17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.