Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புலி பட இயக்குனருக்காக சூர்யா செய்யவுள்ள காரியம்! NGK அப்டேட்டும் வெளிவந்தது

விஜய் நடிப்பில் கடந்த 2015ல் வெளியாகியிருந்த படம் புலி. ரசிகர்களிடமிருந்து மிகுந்த எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தை வடிவேலுவின் 23ஆம் புலிக்கேசி படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக 24ஆம் புலிக்கேசி படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் புதியதாக ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

பிளாக் டிக்கெட் கம்பெனியும் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்தின் தலைப்பை இன்று மாலை 7 மணிக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளாராம்.

மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்த சூர்யாவின் நடிப்பில் வருகிற 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ள NGK படத்தின் எமோஜியும் தற்போது வெளியாகியுள்ளது.