Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகர், சுற்றுலா வழிகாட்டியாக மாறிய அவலம்! என்ன கூறுகிறார் பாருங்கள்

சன் டிவி-யில் ஒளிபரப்பான குலதெய்வம் தொடர்மூலம் சீரியலுக்குள் வந்தவர், பவித்ரன். குலதெய்வம் நிறைவடைந்த பின் அவ்வளவாகத் தொடர் வாய்ப்புகள் அமையாமல் இருந்தவருக்கு யாரடி மோகினி, சந்திரலேகா உள்ளிட்ட சில தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தன.

ஆனால் அந்த சீரியல்களிலும், சமீபமாக இவரை பார்க்க முடியாத நிலையில் சுற்றுலா வழிகாட்டியாக பவித்ரன் மாறிவிட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது. எக்ஸ்ப்ளோர் வித் பவின் என்கிற பெயரில் யூ டியூப் சேனல் ஆரம்பித்து இந்த வேலையை அவர் பார்க்கிறார்.

இதுபற்றி அவரே கூறுகையில், சீரியல், சினிமா நோக்கிதான் என் பயணம். ஆனால் இதில் மாசத்துக்கு 10 நாளைக்கு தான் வேலை இருக்கும். மத்த நாட்களில் என்ன செய்வது என்றே தெரியாது. சினிமா க்ளிக் ஆகுற வரைக்கும் வேலை இல்லாம ஒரு நாள்கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்காகவே இந்த சேனல். இன்னைக்கு சீரியல்களில் நடிச்சிட்டிருக்கின்ற முக்கால்வாசி ஆர்ட்டிஸ்ட்டுகளின் நிலை இப்படித்தான் இருக்கு என்கிறார்.