Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்சென்னை தொகுதியில் பவர்ஸ்டார் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா? விரிவான தகவல் இதோ

2019 நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் எண்ணி இன்று(23.05.2019) முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை, திமுக 37 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக சென்னையின் 3 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சியின் சார்பில் தென்சென்னையில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிட்டவர்களில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒருவர்.

இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் தற்போது வரை 425 வாக்குகளைப் பெற்றுள்ளார். திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்த பவர் ஸ்டார் தற்போது அரசியல் களத்தில் கால்பதித்து பெற்ற வாக்குகளும் ரசிகர்களிடையே நகைப்புக்குள்ளாகியுள்ளது.