Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிகுந்த ஆவேசமாக தேர்தலில் போட்டியிட்ட பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்ன ஆனார்? முழுவிபரம் இதோ

தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்ப்பட்டாளத்தை கொண்டுள்ளவர் பவர் ஸ்டார் பவன்கல்யாண். கடைசியாக 2018-ல் வெளியான Agnyaathavaasi படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து ஜன சேனா பார்ட்டியில் முழுவதுமாக ஈடுபட்டுவருகிறார்.

2019 லோக்சபா தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் பீமாவரம், கஜூவாஹா என்ற இரண்டு இடங்களில் போட்டியிட்டார், பவன் கல்யாண். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் இவரது கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளுக்கான இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

பவன் கல்யாணின் கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பீமாவரத்தில் 8,357 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும் கஜூவாஹாவில் 16,486 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை அடுத்து பவன் கல்யாண் என முடிவு எடுக்கப்போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.