Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கர் இல்லை.. நண்பன் இயக்க விஜய் முதலில் என்னை தான் அழைத்தார்: முன்னணி இயக்குனர்

ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆன 3 இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அமீர் கான் நடித்த ரோலில் விஜய் நடித்திருந்தார், அதற்கு தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இயக்கினார். ஆனால் முதலில் விஜய் என்னை தான் அழைத்து இந்த படத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை அவர் கூறியுள்ளார்.