Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புண்ணியம் கட்டிக்கிட்டாங்க.. தேர்தலை குறிப்பிட்டு நயன்தாரா பற்றி பேசிய ராதாரவி

நடிகை நயன்தாரா பற்றி ஒரு படவிழாவில் நடிகர் ராதாரவி பேசியது பெரிய சர்ச்சை ஆனது. அதன் பிறகு அவருக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இதுபற்றி திமுக கட்சி தலைவர் ஸ்டாலினிடம் புகார் அளித்தார். அதன் பிறகு ராதாரவி அந்த கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று நடந்த கொரில்லா படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ராதாரவி நயந்தாராவை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

"என் வாழ்க்கையில் முதல் முறையாக பொது ஜனமாக இருந்து நான் தேர்தலை பார்த்தேன். எங்கும் போகல வரல.. அதுக்கு ஒருத்தங்க.. வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் தான் பார்த்தேன். என்னை வாழவைத்துக்கொண்டிருப்பதே இன்டர்நெட் குரூப் தான். என்னை youtube புகழ் என்று தான் மேடையிலேயே அலைகிறார்கள்," என ராதாரவி பேசியுள்ளார்.