Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேர்தலில் படுதோல்வி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுரேஷ்கோபி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் பாஜகவில் சேர்ந்து ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார் சுரேஷ்கோபி.

ஆனாலும் கேரள மாநிலம் முழுவதும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவிற்கும் எதிரான அலை வீசியதால் அறுதிப்பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

இதனால் வெற்றி பெறுவார் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ்கோபி தோல்வியை தழுவினார். இருப்பினும் தனது வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கும் தனக்கு இந்த அளவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு உணவு வழங்கி உபசரித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சுரேஷ்கோபி.