Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னைக்கு வரும் தயாரிப்பாளர்! மரியாதை கிடைக்குமா? காஞ்சனா ரீமேக் பற்றி நாளை இறுதி முடிவு

நடிகர் ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக் இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளிவந்தது. ஷூட்டிங்கும் துவங்கி நடைபெற்றுவந்த நிலையில் திடீரென லாரன்ஸ் விலகுவதாக அறிவித்தார்.

அக்ஷய் குமார் கண்ணனுக்கு மை போடுவது போன்ற ஒரு பர்ஸ்ட் லுக் லாரன்ஸுக்கு தெரியாமல் வெளியிடப்பட்டது. தனக்கு மரியாதை கொடுக்காதவர்கள் இடம் நான் பணியாற்றமாட்டேன் என கூறி லாரன்ஸ் லட்சுமி பாம் படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் நாளை லாரன்ஸை சந்திக்க தயாரிப்பாளர்கள் சென்னை வருகிறார்களாம். அப்போது அவர்கள் மரியாதை கொடுத்தால் மீண்டும் அந்த படத்தில் இணைவது பற்றி யோசிப்பேன் என லாரன்ஸ் கூறியுள்ளார்.

இறுதி முடிவு நாளை தெரிந்துவிடும் என ரசிகர்களுக்கு அவர் ட்விட் செய்துள்ளார். இது ஒருபுறமிருக்க Farhad Samji என்ற புது இயக்குனரை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் மீடியாவில் செய்தி பரவி வருகிறது.