Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல மொழி கற்பது பலம் தான்! ஆனால்.. ஹிந்தி சர்ச்சை பற்றி RJ பாலாஜி

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் LKG. இந்த படத்தில் அரசியல் பற்றி பல விஷயங்கள் காமெடியாக கலாய்க்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழ்நாட்டில் ஹிந்தி திணிக்கப்பட முயற்சி நடப்பட்டதாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஆர்ஜே பாலாஜி இது பற்றி ட்விட்டரில் LKG படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டுள்ளார்.

”தமிழ்நாடு ஹிந்திக்கு எதிரான மாநிலம் அல்ல. ஹிந்தி திணிப்பதை தான் எதிர்க்கிறது. பல மொழிகள் அறிந்திருப்பது பலம் தான். ஆனால் அது விருப்பத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும், திணிப்பின் மூலம் அல்ல” என பாலஜி கூறியுள்ளார்.

loading...