Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 300 மில்லியன், அஜித் 250 மில்லியன், பிரமாண்ட சாதனை

கோலிவுட்டின் கிங் ஆப் ஓப்பனிங் என்று சொல்லப்படுவது விஜய், அஜித்தை தான். இவர்கள் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்களே காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய், அஜித்தின் சாதனைகள் திரையரங்கு மட்டுமின்றி தற்போதெல்லாம் யு-டியூபிலேயே தொடங்கிவிடுகின்றது.

டீசர் எத்தனை கோடி ஹிட்ஸ், எத்தனை கோடி லைக்ஸ் என போட்டிகள் தொடங்குகின்றது.

அந்த வகையில் ஒரு படத்தின் ஆல்பத்தை வைத்து பார்க்கையில் விஜய்யின் மெர்சல் பாடல்களின், ஆடியோ, வீடியோ சேர்த்து 300 மில்லியனை கடந்துள்ளது.

அதேபோல் கடந்த வருடம் வந்த விஸ்வாசம் 250 மில்லியனை கடந்துள்ளது, இது தான் இவர்கள் படங்களில் இதுவரை வந்ததில் யு-டியூபில் அதிகம் பேர் பார்த்த ஆல்பம் என கூறப்படுகின்றது. இப்படியொரு சாதனையை மெர்சல், விஸ்வாசம் செய்துள்ளது.