Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடிவேலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்!

வடிவேலு தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா காமெடி நடிகர். இவருடைய காமெடிக்கு இன்றும் பலரும் ரசிகர்கள் தான், ஆனால், அவரோ தான் யாரால் வளர்ந்தோமோ, அவரை கூட மதிக்காமல் பேசுவது பலருக்கும் கஷ்டம் தான்.

இந்நிலையில் தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் சமுத்திரக்கனி, வடிவேலு ஒரு யு-டியூப் சேனலில் சிம்புதேவனை ஒருமையில் பேசியது, ஷங்கர் படைப்புக்களை தவறாக பேசியது போன்ற காரணத்திற்காக கடுமையாக கண்டித்துள்ளார்.

இதில் 'அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!' என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.