Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்க தேர்தல் நடக்காது! ராதாரவியின் பேச்சால் பரபரப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிரணியாக போட்டியிட்டு தோல்வியை தழுவிய சரத்குமார் அணியில் இருந்தவரும், நடிகர் சங்க முன்னாள் பொது செயலாளருமான ராதாரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில் நடிகர் சங்க தேர்தல் கண்டிப்பாக நடக்காது என கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன். இப்போது அது தான் நடந்திருக்கிறத்து. எதற்கெடுத்தாலும் விஷாலை முன்னிலைப்படுத்தி முன்னிலைப்படுத்தி இப்போது அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது.

23 ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. அவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை. நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் காண்டிப்பாக நடக்காது என கூறினார்.