Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய அளவில் டிரண்டான விஜய், மாஸ் காட்டிய ரசிகர்கள்- ஸ்பெஷல் டிரண்ட்

விஜய் ரசிகர்கள் அவரது 63வது படத்திற்காக ஆவலாக வெயிட்டிங். படமும் சென்னையில் பெரிய செட் போட்டு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

ஆனால் இடையில் சில படப்பிடிப்பு தள புகைப்படங்கள் லீக் ஆக அது படக்குழுவினருக்கு கொஞ்சம் சோகத்தை கொடுக்கிறது. படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை ஆனால் விஜய் நேற்று டுவிட்டரில் இந்திய அளவில் டிரண்டாகியுள்ளார்.

அதாவது ரசிகர்கள் Me-Vijay என பதிவு செய்து தங்களுக்கு பிடித்த விஜய் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளனர். அது சென்னை அளவில் முதல் இடத்திலும் இந்திய அளவில் 4வது இடத்திலும் டிரண்டாகியுள்ளது.