Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி தனக்கு எப்படிப்பட்ட மாமனார்- மனம் திறந்து பேசிய தனுஷ்

தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' வரும் 21ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் தனுஷ். முன்னதாக மும்பையில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷுடன் அவரின் மனைவி ஐஸ்வர்யா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனுஷ் தனது மாமனார் ரஜினிகாந்த்தை பற்றி மனம் திறந்து பேசினார்.

ரஜினி சார் மாதிரி சான்ஸே இல்லை. அவர் போன்று யாராலும் நடிக்கவே முடியாது. பிற குடும்பங்களில் மாமனாரும், மருமகனும் எப்படி பேசிக் கொள்வார்களோ அது போன்று தான் நானும், அவரும் பேசுவோம். என்ன நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருப்பதால் சில நேரம் வேலை தொடர்பாகவும் பேசிக் கொள்வோம் என்கிறார் தனுஷ்.