Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் கிரேஸி மோகன் மரணத்தில் என்ன நடந்தது- உண்மையை கூறிய அவரது தம்பி

நடிகர் கிரேஸி மோகன் அவர்களின் மரணம் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவர்களது குடும்பத்தினருக்கு கிரேஸி மோகனின் இழப்பு பெரிய சோகத்தை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் அவரின் மரணம் குறித்து நிறைய வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. அவர் நீண்ட நாட்களாக நோயால் அவதிப்பட்டார் போன்று வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன.

இதையெல்லாம் பார்த்த அவரது தம்பி மது பாலாஜி ஒரு வீடியோவில், முதலில் மோகன் அவர்களின் மரணம் எங்களுக்கு பெரிய துக்கத்தை கொடுத்துள்ளது, 10ம் தேதி காலை 7.30 மணியளவில் நான் அவரை சந்தித்து பேசினேன். 9.15 மணியளவில் காலை உணவு எடுத்துக் கொண்டார், பின் 9.45 மணிக்கு என்னை அழைத்து மார்பு வலிக்கிறது என்று கூறினார். உடனே நான் அவரது இல்லத்திற்கு சென்று காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

நன்றாக சிகிச்சை கொடுத்தார்கள், ஆனால் அவரது நேரம் முடிந்துவிட்டது, எந்த ஒரு நோயும் இல்லாமல் அவர் நன்றாக தான் இருந்தார் என்று பேசியுள்ளார்.