Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரும் எதிர்பாராத நேரத்தில் சர்ச்சை பேச்சாளரின் அதிரடி செயல்! அரசியல் வட்டாரம் அதிர்ச்சி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ராதா ரவி அண்மைகாலமாக சினிமா நிகழ்ச்சி மேடைகளில் பகிரங்கமாக பேசி வருகிறார். இது சர்ச்சையாக இருந்து வந்தாலும் சில நேரங்களில் வரவேற்பை பெற்றது.

ஆனால் நயன்தாராவின் கொலையுதிர்காலம் படத்தின் நிகழ்ச்சியின் போது அவர் பேசியது பெரும் சர்ச்சையானது. பலரும் கண்டனங்கள் தெரிவிக்க பின் ராதா ரவியும் தன் கருத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதனால் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கே டிவிட்டரில் ராதா ரவி மீது புகார் அளித்திருந்தார். இதனால் ராதா ரவியை அக்கட்சியிலிருந்து நீக்கினார்கள்.

இந்நிலையில் தற்போது அவர் அதிமுக கட்சியில் தன்னை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.