Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீடு உரிமையாளரை மிரட்டிய கேஜிஎப் யாஷ்? குடும்பத்தின் மீது அதிர்ச்சி புகார்

கேஜிஎப் படத்தின் மூலம் இந்திய அளவின் பேசப்பட்டவர் கன்னட நடிகர் யாஷ். இவர் அடுத்து அதே படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் யாஷ் மற்றும் அவரது குடும்பம் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. வீட்டை காலி செய்யச்சொல்லி பலமுறை உரிமையாளர் கேட்டும் அவரது குடும்பம் மறுத்து வந்துள்ளது. அதனால் அவர் சட்டப்படி நீதிமன்றம் சென்று யாஷ் குடும்பத்தை வெளியேற்றியுள்ளார்.

இது பெரிய செய்தியாகி யாஷ் பெயர் கெட்டுவிட்டது. அதனால் உரிமையாளர் குடும்ப உறுப்பினர் ஒருவரை ஹோட்டல் அறைக்கு அழைத்து பேசியுள்ளார் யாஷ். 'நீங்கள் தான் என் பெயரை கெடுத்துவிட்டிர்கள்.. எனக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிடுங்கள்' என கேட்டுள்ளார் யாஷ்.

ஆனால் அவர் மறுத்ததால் அவரை மிரட்டினார் நடிகர் என்றும் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.