Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தானத்திற்கு ஷாக் கொடுத்த கவுண்டமணி, என்ன இப்படி சொல்லிட்டாரே!

சந்தானம் தமிழ் சினிமாவின் கிங் ஆப் காமெடியன். ஆனால், தற்போது ஹீரோ அவதாரம் எடுத்து காமெடிக்கு டாட்டா சொல்லிவிட்டார்.

இதை தொடர்ந்து இவர் ஹீரோவாக பல படங்கள் நடித்தாலும், தில்லுக்கு துட்டு சீரிஸ் மட்டுமே நல்ல ஹிட் அடித்தது.

இந்நிலையில் இவர் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க கவுண்டமணியை அனுகியுள்ளனர்.

அதற்கு கவுண்டமணி தன் ரோலை கேட்கும் முன்பே, படம் முழுவதும் நான் வருகிறேன் தானே, அப்போ நடிக்கிறேன் என சொல்ல, அனைவரும் ஷாக் ஆகி, இல்ல சார் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்களாம்.

அதாவது தன் கதாபாத்திரம் படத்தில் குறைவு என்பதை அறிந்த கவுண்டமணி தன் ஸ்டைலில் நடிக்கமாட்டேன் என்று கூறி அனுப்பியுள்ளார்.