Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லவ் ரொமான்ஸ் ஹீரோ நடிகருக்கு நேர்ந்த விபத்து! மருத்துவமனையில் அனுமதி - ரசிகைகள் கவலை

சாய்பல்லவி நடித்த கரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நாகசௌர்யா. இப்படத்தால் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடுகள், சமூகவலைதளத்தில் மோதல்களும் வந்தன.

தற்போது நாகசௌர்யா தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். விசாகபட்டினத்தில் அவர் தற்போது நடித்து வரும் படத்தின் ஷூட்டின் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் இன்று காலை ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக அவரின் கால் மூட்டில் பலத்த அடிபட்டது. இதனால் படக்குழு அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தது.

அவரின் ரசிகர்கள், ரசிகைகள் கவலையில் இருக்கின்றனர். பலமாக அடிப்பட்டுள்ளதால் அவர் ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டி இருப்பதால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.