Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை பார்க்கும் வரை நான் விஜய் ரசிகன் தான், வளர்ந்து வரும் நடிகர் ஓபன் டாக்

அஜித், விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் நடிப்பில் வரும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பல கோடி வசூலை அள்ளும்.

அப்படியிருக்க அங்காடித்தெரு படத்தின் மூலம் சினிமாவின் எண்ட்ரீ ஆனவர் மகேஷ். இவர் அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் தலையை காட்டினார்.

இந்நிலையில் சமீபத்தில் சினிஉலகம் சார்பாக அவரை நேர்காணல் செய்த போது, அஜித்துடன் எடுத்த புகைப்படம் குறித்து பேசினோம்.

அதற்கு அவர் ‘அஜித் சார் அவர்களை பார்க்கும் முன்பு வரை நான் விஜய் ரசிகன் தான், ஆனால், அஜித் சாரை பார்த்த போது அவருடைய ரசிகன் ஆகிவிட்டேன்.

ஏனெனில் என்னை அழைத்து என் பெயரை சொல்லி பேசிய விதம் மிக கவர்ந்தது’ என கூறியுள்ளார்.