Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

சிம்புவின் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. இந்த படத்திற்கு அடுத்ததாக இப்படத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட வெங்கட்பிரபு உடனான மாநாடு படம் உருவாகவிருந்தது.

மேலும் இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க லண்டனிற்கு சிம்பு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து வந்தவுடன் தனது முன்னாள் காதலி ஹன்சிகாவின் மஹா படத்தில் நடிக்க ஆயத்தமானார்.

இதன் படப்பிடிப்பில் சிம்புவின் காட்சிகள் கிட்டத்தட்ட முடிவடைந்ததை அடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடக்கவுள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தில் பிக்பாஸின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட காமெடி நடிகர் டேனியல் அன்னே போப் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.