Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சல்மான் கான், ரன்வீர் சிங்கை எல்லாம் பின்னுக்கு தள்ளிய தனுஷ்- சாய்பல்லவி

தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால் வைத்துவிட்டார். இந்நிலையில் தனுஷ் படங்கள் மட்டுமில்லாமல் பாடல்கள் மூலம் செம்ம ரீச் ஆகின்றார்.

ஏற்கனவே கொலைவெறி பாடம் செம்ம ஹிட் அடிக்க தற்போது மாரி-2வில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த பாடல் சுமார் 53 கோடி ஹிட்ஸை கடந்து இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் லிஸ்டில் டாப்-15குள் உள்ளது.

இந்நிலையில் இன்று சல்மான் கான், ரன்வீர் சிங் பாடல்களை பின்னுக்கு தள்ளி 13வது இடத்திற்கு வந்துள்ளது.

எப்படியும் அடுத்த வாரத்திற்குள் டாப்-10 லிஸ்டில் இந்த பாடல் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆக சாய் பல்லவியின் நடனம், பிரபுதேவாவின் நடன அமைப்பும் முக்கிய காரணம்.