திரையுலகில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகராக, இதயத்து அதிபதியாய் தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். தனது 26 ஆண்டு கால நடிப்பால் 6 லிருந்து 60 வரை உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது சீரான நடிப்பால், வீட்டில் ஓர் அங்கமாய் விளங்கிவரும் இவரது பிறந்தநாளை சமீபத்தில் தமிழகமே கொண்டாடியது.
பிறந்தநாள் பரிசாக வெளியான பிகில் படத்தின் போஸ்டர்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. திரை பிரபலங்கள் துவங்கி உலகளவில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் நண்பர்கள் வழியாக வரும் வாழ்த்து எப்போதுமே ஸ்பெஷல் தானே. விஜய்யின் பால்ய நண்பர்களான மனோஜ், சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து பதிவு செய்துள்ளனர். பிறந்தநாள் ட்ரீட் புகைப்படங்களும் வெளியானால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகமானார்கள்.