Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓட்டு போட வந்த விஜய்! அனல் பறந்த தேர்தல் களம் - சூடுபிடித்த நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்கத்தின் அடுத்த நிர்வாக குழுவிற்கான தேர்தல் இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாசர், பாக்யராஜ் என இரு தலைமையிலான அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னையின் மயிலாப்பூர் புனித எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. சினிமா, சின்னத்திரை சேர்ந்த பலரும் வாக்களித்து வருகின்றனர்.

தற்போது விஜய் நேரில் வந்து ஓட்டளித்து தன் கடமையை நிறைவேற்றியுள்ளார். இதனால் தேர்தல் களம் சற்று பரபரப்பானது. சமூகவலைதளத்தில் இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.