Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா! உண்மையில் நடந்த சம்பவம்

விஜய்க்கு பிரம்மாண்ட அளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. சமூகவலைதளங்களில் சங்கம் வைத்து செயல்பட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். கேரளாவில் விஜய்க்கு ரசிகர்களின் செல்வாக்கு அதிகம். அந்த சினிமாவை சேர்ந்த சினிமா பிரபலங்களுக்கும் விஜய்யை நேசிக்கிறார்கள்.

அந்த வகையில் சீடன் படத்தின் தனுஷுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் விஜய ரசிகராம். அவர் நேற்று விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதே வேளையில் சீடன் படத்திற்கு விஜய்யை பிரிமியர் காட்சிக்கு அழைத்திருந்தார்கள்.

அப்போது நேரில் விஜய்யை பார்த்த உன்னி தன்னை அவரிடம் அறிமுகப்படுத்த முயன்றபோது பதட்டத்தால் தடுமாறியுள்ளார். பின் விஜய் சிரித்தபடியே அவரை ரிலாக்ஸ் செய்யவைத்தாராம். அப்போது முதல் தான் விஜய் ரசிகர் என்கிறார் உன்னி.