தேசிய ட்ரெண்டிங்கில் மிகவும் மோசமான டேக்! இன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் சண்டை
நடிகர் அஜித் மற்றும் விஜய் என்னமோ நண்பர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அவர்களது ரசிகர்கள் சண்டை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே தான் சென்றுகொண்டிருக்கிறது.
விஜய் பிறந்தநாள் முன்பு துவங்கிய சண்டை ட்விட்டரில் தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. இன்று விஜய் ரசிகர்கள் #VanduMuruganAJITH என ட்ரெண்ட் செய்ய, அஜித் ரசிகர்கள் #kaipullaVIJAY என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளது வடிவேலு நடித்த வண்டுமுருகன் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு இப்படி ட்ரோல்ல செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
இது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அஜித், விஜய் தங்கள் ரசிகர்களுக்கு வெளிப்படையாக அறிவுரை கூறினால், இந்த சமூக வலைதள சண்டை நிற்க வாய்ப்புள்ளது. செய்வார்களா?