நடிகர் சங்க தேர்தலில் கள்ளஓட்டு.. வாக்களிக்க சென்ற முன்னணி நடிகர் அதிர்ச்சி
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று நடிகர் சங்க தேர்தல் நடந்து வருகிறது. அதில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் அணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இன்று காலை துவங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுமார் 1600கும் மேற்பட்ட நடிகர்கள் இதுவரை வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் மோகன் வாக்களிக்க வந்தபோது அவரது ஓட்டை யாரோ கள்ளஓட்டாக பதிவிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. சென்று முறை நடந்த தேர்தலிலும் இதே போல அவரது ஓட்டு கள்ளஓட்டாக பதிவாகியிருந்தது.
மேலும் அதன்பிறகு தேர்தல் நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் முறையிட்டார் மோகன். அதன்பிறகு அவருக்கு வாக்குசீட்டு கொடுக்கப்பட்டு ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த வாக்குசீட்டை பெட்டியில் போடாமல், தனியாக வாங்கி வைத்துக்கொண்டாராம் அதிகாரி.