Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவரே வாக்களிக்காமல் அதுக்கு மேல என்ன எலெக்ஷன்! கொந்தளித்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் சற்றுமுன் நடிகர் சங்க தேர்தலில் தன்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளார். அதன்பிறகு வெளியில் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசியபோது அதிருப்தியில் பேசினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியே வாக்களிக்கவில்லை, அவர் வாக்களிக்காமல் அதுக்கு மேல என்ன எலெக்ஷன். சூப்பர்ஸ்டார் வாக்கு ரொம்ப முக்கியம். அதனால் தபால் வாக்கு அனுப்பும் நாட்களை இன்னும் அதிகரிக்கவேண்டும்" என சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஜெயிக்கும் அணிக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன என அவரிடம் கேட்டதற்கு, "தனிப்பட்ட முறையில் கோரிக்கை எதுவும் இல்லை. உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள். அதை இன்னும் அதிகம் செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது" என சிவகார்த்திகேயன் கூறினார்.